சென்னைக்கும் கொழும்பு கட்டுநாயக்கவிற்கும் இடையில் சேவையில் ஈடுபடும் 4 விமான சேவைகள் ஒரே நாளில் முழுமையமாக இரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானத்தில் பயணிக்க போதிய பயணிகள் இல்லாத காரணத்தினாலேயே விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொழும்பில் இருந்து, சென்னை விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை 2.10 மணி மற்றும் மாலை 3.05 மணியளவில் 2 சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் சேவையில் ஈடுபடவிருந்தன.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து, இலங்கை தலைநகர் கொழும்புக்கு அதிகாலை 3.10 மணி மற்றும் மாலை 4.10 மணியளவில் இரண்டு சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் சேவைகளும் போதிய பயணிகள் வருகை இல்லாமல் ரத்து செய்யப்பட்டன.
தற்போது கோடை விடுமுறை முடிந்துவிட்ட நிலையில், இலங்கை செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளமையும் இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…