இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 232,341 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அவர்களில் 34,006 பேர் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.

மேலும், ரஷ்யாவில் இருந்து 29,241 பேரும், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 24,830 பேரும், ஜெர்மனியில் இருந்து 16,720 பேரும், பிரான்சில் இருந்து 15,063 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அதன்படி, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 485,102 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects