ஒக்டோபர் மாதத்தின் முதல் எட்டு நாட்களில் 26,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி, ஒக்டோபர் மாதத்தில் இதுவரை 26,272 வெளிநாட்டு பிரஜைகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.
ஒக்டோபர் மாதத்தில் 6,293 இந்திய பிரஜைகள் வருகை தந்துள்ளதால், இந்தியாவில் இருந்து வரும் பார்வையாளர்கள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
இதேவேளை , ரஷ்யாவில் இருந்து 2,352 சுற்றுலாப் பயணிகள் , ஐக்கிய இராச்சியத்திலிருந்து 1,904 சுற்றுலாப் பயணிகளும் சீனாவில் இருந்து 1,900 சுற்றுலாப் பயணிகளும் , ஜேர்மனியிலிருந்து 1,679 சுற்றுலாப் பயணிகளும் அவுஸ்திரேலியாவிலிருந்து 1,307 சுற்றுலாப் பயணிகளும் இந்த மாதம் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக SLTDA தெரிவித்துள்ளது.
செப்டெம்பரில் மொத்தம் 111,938 சுற்றுலாப் பயணிகள் வந்ததாக SLTDA தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் , இந்த வருடத்தில் இதுவரை 1,042,528 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇