அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்களை ஆராயும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்டத்தின் கீழ் 475,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை கடந்த 13ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. அஸ்வெசும முதலாம் கட்டத்தின் கீழ் 34 இலட்சம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அவர்களிர் 18 இலட்சம் பேர் அஸ்வெசும கொடுப்பனவை பெற்றுக்கொள்ள தகுதி பெற்றவர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
ஏனைய 16 இலட்சம் பேரின் விண்ணப்பங்களும் சமூக பாதுகாப்பு தரவுக் கட்டமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇