இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மற்றும் முழுமையான டைனோசர் படிமம் 17.07.2024 அன்று நியூயோர்க்கில் ஏலத்தில் விடப்படவுள்ளது.
அபெக்ஸ் (Apex) என பெயரிடப்பட்ட 150 மில்லியன் ஆண்டுகள் பழமையான இந்த படிமம் 11 அடி உயரமும் 27 அடி அகலமும் கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது.
இந் டைனோசர் படிமம் அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள மோரிசன் என்ற பகுதியில் கடந்த 2022ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இந் நிலையில் ஏலத்தில் விடப்படவுள்ள அபெக்ஸ் எனப்படும் டைனோசர் படிமம் 4 முதல் 6 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இது விற்பனை செய்யப்படும் வரையில் Sotheby’s இல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் டைனோசர் மாதிரி ஏலத்தில் விடப்படுவது இதுவே முதல் முறையாகும் என குறிப்பிடப்படுகின்றது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇