கொழும்பு நகரின் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் வகையில், பாதையோரம் சிறிய மரங்களை வளர்க்கும் திட்டத்தை கொழும்பு மாநகர சபை ஆரம்பித்துள்ளது.
பிரதான வீதியோரங்களில் இடையிடையே கற்களை இடுவதன் மூலம் நகரின் வெப்பநிலையைக் குறைக்க முடியாது. எனவே வீதியோரங்களில் மரங்களை நடவேண்டும் என கொழும்பு மாநகர சபையின் காணி மற்றும் சுற்றாடல் அபிவிருத்திப் பிரிவின் பொறியியலாளர் இந்திக்க பத்திரன தெரிவித்துள்ளார்.
மேலும் மரங்களின் அருகில் இன்டர்லாக் கற்களை இடுவது தாவரங்களின் செயல்முறைக்கு தீங்கு விளைவிக்கும் என தாவர நிபுணர் சுனில் கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக கொழும்பில் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் வீதிகளில் உள்ள இன்டர்லொக் கற்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொறியியலாளர் இந்திக தெரிவித்துள்ளார். ஜோர்ஜ் ஆர்.டி.சில்வா மாவத்தையில் உள்ள இன்டர்லாக் கற்களை மாற்றி சிறிய செடிகளை நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இது நகரின் வெப்பநிலையை சிறிது குறைக்கும் மற்றும் நகரத்தை சுற்றியுள்ள வளிமண்டலத்தின் தரத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கொழும்பு மாநகரில் உள்ள மரங்களுக்கு அருகில் உள்ள கற்களை அகற்றுவதற்கு கொழும்பு நகர சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇