இந்த ஆண்டு பெரும்போகத்துக்கான பெரிய வெங்காயச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
மாத்தளை மற்றும் அநுராதபுர மாவட்டங்களில் சுமார் ஆயிரத்து 500 ஹெக்டெயர் நிலப்பரப்பில் வெங்காயச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, விவசாயிகளிடமிருந்து உரிய விலையில் வெங்காயம் கொள்வனவு செய்யப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாயத் திணைக்களத்தின் வெங்காய ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் பயிர்ச்செய்கைக்கு பொருத்தமான புதிய பகுதிகள் இனங்காணப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டு சிறுபோகத்தில் இரண்டாயிரம் ஹெக்டெயருக்கும் அதிகமான நிலப்பரப்பில் பெரிய வெங்காயத்தினை பயிரிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇