கடந்த 10 வருடங்களில் மாத்திரம் குருநாகல் மாவட்டத்தில் சுமார் 352,000 தென்னை மரங்கள் வெட்டப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய அடிப்படை கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் செயலாளர் பத்மகாந்த வந்துராகல இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 30 வருடங்களுக்கு முன்னர் குருநாகல் மாவட்டத்தில் 300,000 ஏக்கர் தென்னைகள் இருந்ததாகவும், தற்போது 93,000 ஏக்கர் தென்னைகள் மாத்திரமே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த காலப்பகுதியில் 200,000க்கும் அதிகமான தென்னை மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇