வஸ்கடுவ, சைட்ரஸ் ஹோட்டல் மண்டபத்தில் நடைபெற்ற மேற்கு ஆசிய நேரக் கட்டுப்பாடு (Blitz) செஸ் போட்டியில் இலங்கை 3 தங்கம், 3 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களை வென்றெடுத்தது.
10 வயதுக்குட்பட்ட பகிரங்க பிரிவில் செனித்த சிஹாஸ் தின்சார கருணாசேன, சாத்தியமான 9 புள்ளிகளில் 8.5 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
13 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கான பிரிவில் FIDE மாஸ்டர் தேவிந்தியா ஓஷினி குணவர்தன 8 புள்ளிகளுடன் தோல்வி அடையாதவராக தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
அவரை விட 12 வயதுக்குட்பட்ட பகிரங்க பிரிவில் வினுகா திஹைன் 8 புள்ளிகளை தோல்வி அடையாதவராக தங்கத்தை வென்றெடுத்தார்.
அவர்களை விட மேலும் 10 சிறுவர், சிறுமியர் இலங்கைக்கு பதக்கங்களை வென்று கொடுத்தனர்.
8 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பிரிவில் எஸ் நெதுமி திஹன்சா பெரேரா (வெண்கலம்), 8 வயதுக்குட்பட்ட பகிரங்க பிரிவில் ஜனிரு நெத்மித்த (வெள்ளி), துலெய்ன் தேனுல அம்பகஹவத்த (வெண்கலம்), 10 வயதுக்குட்பட்ட பகிரங்க பிரிவில் லோஹாஸ் தேவ்மினா ரோட்றிகோ (வெள்ளி), தெஹாஸ் ரித்மித்த கிரிங்கொட (வெண்கலம்), 12 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பிரிவில் தருலி திஹன்ச சேனாரத்ன (வெண்கலம்), 14 வயதுக்குட்பட்ட பகிரங்க பிரிவில் ஜீ. கல்கொடுவ (வெண்கலம்), 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பிரிவில் எம். எசந்தி நிவன்சா (வெள்ளி), கெஹன்சா ரனுமி டாங்கே (வெண்கலம்) 18 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் தெஹன்சா நிசந்துனி சந்தநாயக்க (வெண்கலம்) ஆகியோர் பதக்கங்கள் வென்றனர்.
10 வயதுக்குட்பட்ட பகிரங்க பிரிவில் இலங்கை தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றமை விசேட அம்சமாகும்.
இச் செஸ் போட்டியில் இந்தியா 4 தங்கப் பதக்கங்களை வென்று முதலிடத்தைப் பெற்றதுடன் கஸக்ஸ்தான், இலங்கை ஆகியன தலா 3 தங்கப் பதக்கங்களை வென்றெடுத்தன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇