கோழி இறைச்சி, முட்டைகள் மற்றும் அன்னாசிப்பழங்களைச் சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கையிலிருந்து கோழி இறைச்சி, முட்டைகள் மற்றும் அன்னாசிப்பழங்களைச் சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான நீண்டகால தடைகளைச் சீன அரசாங்கம் நீக்கியுள்ளது.

இலங்கை வந்திருந்த சுங்கப் பொது நிர்வாக பிரதி அமைச்சர் வாங் லிங்ஜங் (Wang Lingjung) உள்ளிட்ட குழுவினருடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதனடிப்படையில், இலங்கையில் அன்னாசிப்பழ உற்பத்தியாளர்கள் மற்றும் கோழி உற்பத்தியாளர்கள் சீன சந்தைக்குக் கோழி இறைச்சி, முட்டை மற்றும் அன்னாசிப்பழங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects