இரத்மலானை சர்வதேச விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் அனுர கருணாதிலக்க!

துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க, இரத்மலானை சர்வதேச விமான நிலையத்திற்கு நேரில் சென்று அங்கு முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகள் மற்றும் தற்போதைய செயற்பாடுகளை ஆய்வு செய்துள்ளார்.

இந்தக் கட்டடத் தொகுதி சுமார் ரூ. 3.046 பில்லியன் செலவில் நிர்மாணிக்கப்படும் இதே வேளை குறித்த பணிகளை 2027 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதன்போது, விமான நிலையத்தின் தற்போதைய செயற்பாடுகள், புதிய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளார்.

மேலும், விமான நிலையத்தின் வருமான நிலைமை, பணியாளர்கள் மற்றும் ஊழியர் நியமனங்கள் தொடர்பான தகவல்களையும் அவர் ஆராய்ந்துள்ளார்.

விமானப் போக்குவரத்துத் துறையில் பயிற்சிகளை வழங்கும் நிறுவனங்களுக்குச் சென்ற அமைச்சர் உள்ளிட்ட குழுவினர், அவற்றின் தற்போதைய நிலைமை குறித்தும் ஆய்வு செய்துள்ளனர்.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைகளுக்கும் விஜயம் செய்த அமைச்சர், அங்கு பணியாற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடியதுடன், எதிர்காலத்தில் நிறுவப்படவுள்ள தொழில்நுட்ப மற்றும் தொடர்பாடல் கட்டுப்பாட்டு முறைமைகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

இரத்மலானை விமான நிலையத்தில் தற்போது நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள வசதிகள் வளாகத்தையும் அமைச்சர் விசேடமாகப் பார்வையிட்டுள்ளார்.

.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects