களனி கங்கை பள்ளத்தாக்கின் சில பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அவிசாவளையிலிருந்து ஹங்வெல்ல வரையான சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியின் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, புவக்பிட்டிய தும்மோதர சந்தி, சீதாவக்க தாவரவியல் பூங்கா மற்றும் எட்டியாந்தோட்டை பகுதியின் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பலுமஹர – கடுவெல புதிய கண்டி வீதி உடுப்பில பகுதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதன் காரணமாக அவ்வீதியூடான இலகுரக வாகனப் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










