ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் திட்டம் 07.11.2026 அன்று ருஹுண பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி நடைபெற்ற கண்பரிசோதனை முகாமில் அடையாளம் காணப்பட்ட 458 மாணவ மாணவிகளுக்கு இங்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் உள்ளடக்கும் வகையில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி நிதியம் ஏற்பாடுகளைச் செய்துள்ளதுடன், இதன் இரண்டாவது கட்டம் இன்றைய தினம் ருஹுண பல்கலைக்கழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இத்திட்டத்திற்கு பிரித்தானியாவின் Stroud Rotary Club மற்றும் Wish Foundation ஆகிய நிறுவனங்கள் அனுசரணை வழங்கியுள்ளன.
இந் நிகழ்வில் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும் ஜனாதிபதி சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரோஷன் கமகே, ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை உறுப்பினரும், பேராசிரியருமான ஜே.ஆர்.பி. ஜயகொடி, ருஹுண பல்கலைக்கழக விவசாயப் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் குத்தில ஜயசிங்க, சிரேஷ்ட மாணவ ஆலோசகர் பேராசிரியர் சரத் வன்னிஆரச்சி உள்ளிட்ட மாணவர் சங்க பிரதிநிதிகள், மாணவ மாணவிகள் மற்றும் அனுசரணை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.












இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()










