உலகளாவிய ரீதியாகத் தகவல் தொழில்நுட்பத் துறை முடங்கியதன் விளைவாக, இலங்கையில் உள்ள சில தனியார்த்துறை நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ளன.
நிலைமையை வழமைக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரம், உலகளாவிய ரீதியாகத் தகவல் தொழில்நுட்பத் துறை முடங்கியதன் விளைவாகப் பல நாடுகளில் விமானச் சேவைகள், ஊடகங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட துறைகள் ஸ்தம்பித்துள்ளன.
விமானச் சேவை கணினி கட்டமைப்பு பாதிக்கப்பட்டதன் காரணமாக, பல நாடுகளின் விமான நிலையங்கள் மூடப்பட்டு பல விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன.
அத்துடன் அநேக நாடுகளில் வங்கிச் சேவைகள் பாதிப்படைந்துள்ளதுடன் இது தொடர்பில் வாடிக்கையாளர்களை அறிவுறுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇