மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை இறால் வளர்ப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
இதன் போது கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் பண்ணைகளை மீள் அமைக்கும் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் இடம் பெற்றது.
இதன் போது இறால் வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு துரிதமாக பண்ணை காணிகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நவருபரஞ்சினி முகுந்தன், பட்டிப்பளை பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரன், தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபையின் உதவி பணிப்பாளர் எஸ்.ரவிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇