முதியோர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பில் வறுமைக்குள்ளாகியுள்ள முதியோர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் ஒரு பானை நிதியத்தின் உயர் அதிகாரிகளுடன் பழைய மாவட்ட செயலகத்தில் 13.02.2024 அன்று இடம் பெற்றது.

ஒரு பானை நிதியத்தின் பங்களிப்பில் தெரிவு செய்யப்பட்ட 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் முதியோர்களை வலுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் வரும் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

வாகரை, வவுனதீவு, கிரான் போன்ற பிரதேச செயலக பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட முதியோர்களுக்கு இவ் உதவிகள் வழங்கப்படவுள்ளது.

இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்தியானந்தி, ஒரு பானை நிதியத்தின் பணிப்பாளர் வைத்தியர் டானியல் முத்துவேல், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களான வி.நவநீதன், த.நிர்மலராஜ், எ.சுதர்சன், ஒரு பானை நிதியத்தின் இணைப்பாளர் தங்கராஜா பிரபாகரன் என பலர் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects