இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (H.E. Levan S. Dzhagaryan), இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோர்க்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (23.04.2026) அமைச்சக வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினுது சமன் ஹென்னாயக்க அவர்களும் கலந்துகொண்டார்.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால நட்புறவை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறையினூடாக மேலும் விரிவுபடுத்துவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
முக்கிய அம்சங்கள்:
பரிமாற்றத் திட்டங்கள்: இரு நாட்டு இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு இடையே அறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான விசேட திட்டங்களைச் செயற்படுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ரஷ்யாவிலிருந்து உத்தியோகபூர்வ அழைப்பு: ரஷ்யாவில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாடுகளில் கலந்து கொள்ளுமாறு ரஷ்ய தூதுவர் அவர்கள் அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களுக்கு இதன்போது உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்தார்.
விளையாட்டு தொழில்நுட்பம்:
ரஷ்யாவிடம் உள்ள நவீன விளையாட்டு தொழில்நுட்பம் மற்றும் பயிற்சி முறைகளை இலங்கைக்கு பெற்றுக்கொள்வது குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இக் கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் அருண பண்டார மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டதுடன், ரஷ்ய தூதரகத்தின் சார்பில் இரண்டாம் செயலாளர் கலினா குக்லினா (Ms. Galina Kuklina) பங்கேற்றார்.
இந்தச் சந்திப்பு இலங்கை இளைஞர்களுக்கு சர்வதேச வாய்ப்புகளைத் திறந்துவிடும் ஒரு தீர்மானமிக்க மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










