தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழை காரணமாக , சேனாநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதை அடுத்து நயினாக்காடு உள்ளிட்ட பல பகுதிகளில் கல் ஓயாவின் கரைகள் உடைந்துள்ளன.
இதன்காரணமாக , அம்பாறை மாவட்டத்தில் சுமார் 3,000 ஏக்கருக்கும் அதிக பயிர்ச்செய்கை நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் , விவசாயிகள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
அத்துடன், மழை அதிகரிக்கும் நிலையில், கல்ஓயாவின் கரைகள் மேலும் உடைப்பெடுப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக அம்பாறை மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










