ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணையசேவையை ஆரம்பிப்பதற்காக அடுத்த மாதம் எலான் மஸ்க் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் செய்மதி தொழில்நுட்பத்தின் ஊடாக இணைய வசதி சேவையை வழங்க ஸ்டார்லிங் நிறுவனத்திற்கு அரசாங்கம் அனுமதியை வழங்கியுள்ளது.
இந் நிலையில், தற்போதுள்ள தொலைத்தொடர்பு பரிவர்த்தனைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, எதிர்காலத்தில் சேவை அனுமதிப்பத்திரம் வழங்க அரசாங்கம் செயல்முறையை துரிதப்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக மதுஷங்க திஸாநாயக்க ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளதாவது,
இலங்கைக்கு எலான் மஸ்க் ஆகஸ்ட் மாதம் விஜயம் மேற்கொள்வார். அவர் ஸ்டார்லிங் இணையசேவை அறிமுகப்படுத்தியதன் பின்னர் இச் சேவையை செயல்படுத்த மூன்று வாரங்கள் ஆகும். ஸ்டார்லிங்கிற்கு புதிய சட்டத்தின் கீழ் சேவை வழங்குநர்களின் உரிமம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇