ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த இருவருக்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஊக்கத்தொகையினை வழங்கினார்.
பிரான்ஸ், பாரிஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள இலங்கை இராணுவத்தின் பீரங்கி படையணியின் பணிநிலை சார்ஜன் அருண தர்ஷன மற்றும் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் பணிநிலை சார்ஜன் நதிஷா தில்ஹானி ஆகியோருக்கே இராணுவத் தளபதி இராணுவத் தலைமையகத்தில் வைத்து ஊக்கத்தொகையினை வழங்கினார்.
தலா 10 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகையினை வழங்கிய இராணுவத் தளபதி, தாய்நாட்டிற்காகப் பதக்கம் வென்று இலங்கைக்கும் இராணுவத்திற்கும் பெருமை சேர்க்கத் தனது வாழ்த்துக்களையும் அவர்களுக்குத் தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇