மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்தவும் AU LANKA நிறுவனத்தினரால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
Child Fund நிறுவனத்தின் நிதி அனுசரணையில் முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தில் மொத்தமாக 100 படங்குகள், 100 பாய்கள், 100 போர்வைகள், சிறுவர்களுக்கான 60 பம்பர்ஸ் உட்பட சுகாதாரப் பொருட்கள் வவுணதீவு, கிரான் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகங்களுக்கும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்திற்கும் AU LANKA உத்தியோகத்தர்களினால் கையளிக்கப்பட்டன.
இப்பொருட்கள் பின்னர் கிராம சேவை உத்தியோகத்தர் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டன.
மேலும் கிரான் பிரதேசத்தில் மூன்று கிராம சேவையாளர் பிரிவுகளில் 595 குடும்பங்களுக்கு உலர் உணவுகளும் விநியோகிக்கப்பட உள்ளதாக AU LANKA நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கஜன், தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇