மட்டக்களப்பில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கு ஒல்லாந்தர் கோட்டையை பயன்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலகத்தில் 12.12.2024 அன்று இடம் பெற்றது.
மாவட்டத்தின் புராதன சுற்றுலா தலங்களில் ஒன்றான ஒல்லாந்தர் கோட்டையினைப் பயன்படுத்தி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கு தேவையான செயற்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதன் போது மாவட்டத்திற்கு தேவையான நூதனசாலை ஒன்றை அமைத்தல், ஒல்லாந்தர் கோட்டைக்கான இணைய தளம், விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவக மாணவர்களினால் சுற்றுலா பயணிகளின் உருவங்களை வரைதல் மற்றும் விஞ்ஞான ஆய்வு கூடம், பாரம்பரிய உணவகம் அமைத்தல் போன்ற பல விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன், மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், மாநகர சபை பெறியியளாலர், வைத்தியர்கள், மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், மாவட்ட சுற்றுலாத் துறை அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஏ.விவேகானந்தராஜ், துறைசார் நிபுணர்கள், அரச சார்பற்ற பிரதி நிதிகள், சுற்றுலாத் துறை அபிவிருத்தி உத்தியோகத்தர் மதனா தயாகரன் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது அதிகாரிகள் புராதன ஒல்லாந்தர் கோட்டையை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇