காத்தான்குடி பிரதேச பிரஜா சக்தி உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் பிரஜா சக்தி சமூக அபிவிருத்திச் சபை உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 24.02.2026 அன்று காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கால்நடை மற்றும் காணி விவசாய அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் திலகநாதன், காத்தான்குடி பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழு இணைப்பாளர் அஷ்ஷேய்க் எம்.பீ.எம்.பிர்தெளஸ், கிழக்குமாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் அப்துல்லாஹ், சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் இணைப்பாளர் வானி, உதவி பிரதேச செயலாளர் சில்மியா, பிரதேச செயலக உதவி பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.தனூஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் 18 கிராம சேவகர் பிரிவின் 360 பிரஜா சக்தி சமூக அபிவிருத்தி சபை உறுப்பினர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டதுடன் காத்தான்குடி பிரஜா சக்தி தவிசாளர்களின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects