மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கான உள வலுவூட்டல் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவனின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட உளவளத்துனை இணைப்பாளர் சுபாநத்தினி உதயகாந்தின் ஒழுங்கமைப்பில் பழைய மாவட்ட செயலகத்தில் 30.06.2025 அன்று இடம் பெற்றது.
கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சும் மாவட்ட செயலகமும் இணைந்து இளைஞர் யுவதிகளுக்கான உள வலுவூட்டலை மேற்கொண்டு வருகின்றது.
இந் நிகழ்வின் வளவாளராக உளநல வைத்திய நிபுணர் கமல்ராஜ் கலந்து கொண்டு உளசமூக விழிப்புணர்வுகளையும், இளைஞர்கள் எதிர்நோக்கும் சமூக பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடலையும் மேற்கொண்டார்.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










