சமூக சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சுய உதவிக்குழுக்கள் இணைந்து, கிழக்கு மாகாணத்திற்குரிய சுய உதவிக்குழுக்களை உருவாக்குவது தொடர்பான வேலைத்திட்ட கலந்துரையாடல் மட்டக்களப்பு YMCA மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், முன்னரே சிறப்பாக செயல்பட்டு வரும் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாற்றுத்திறனாளி சங்கத்தை வழிநடத்தி வரும் ஆலோசகர்களும் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களையும் வழிகாட்டுதல்களையும் பகிர்ந்துகொண்டனர்.
எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்திற்குரிய சுய உதவிக்குழுக்களை உருவாக்கும் முயற்சியில் எதிர்நோக்கும் சவால்கள், அவற்றை சமாளிக்கும் உத்திகள், தற்போதுள்ள மாவட்ட மட்ட பிரதிநிதிகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இறுதியில், இந்நிகழ்வின் போது செயற்பாட்டு திட்டம் ஒன்றும் வரையறுக்கப்பட்டதுடன், அதில் காணப்படும் இடைவெளிகளை மிக விரைவில் பூர்த்தி செய்து, வரும் டிசம்பர் மாதத்தில் மேலும் ஒரு பொதுக்கூட்டம் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
இந்நிகழ்வினை சிறுவர் நிதியம் ஒழுங்கமைத்ததுடன், அதன் நிறைவேற்று அதிகாரி நிகழ்வினை முழுமையாக வழிநடத்தினார். மேலும், திருகோணமலை மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர், அம்பாறை மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










