மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனுக்கு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் சிரேஷ்ட தையல் போதனாசிரியர்களால் (15.02.2024) அன்று மாவட்ட செயலகத்தில் வைத்து கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட தையல் போதனாசிரியை நிவேதிதா ரவிச்சந்திரன், மாவட்டத்தின் ஏனைய சிரேஷ்ட தையல் போதனாசிரியைகளான காத்தான்குடி பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் பரினா பாலிக், செங்கலடி நிலையத்தின் காந்திமதி கணேசமூர்த்தி, மண்முனை வடக்கு நிலையத்தின் திருவிளங்கம் விஜயகலா மற்றும் பட்டிப்பளை பயிற்சி நிலையத்தின் அருளம்பலம் அமிர்தவல்லி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது கடந்த காலங்களில் அரசாங்க அதிபரினால் மேற்கொள்ளப்பட்ட சேவைகளை சுட்டிக்காட்டி நன்றி தெரிவித்து பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி தையல் போதனாசிரியர்களால் அரசாங்க அதிபருக்கு இக் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இதன்போது இம்மாவட்டத்தில் தையல் தொழில் பயிற்சி வழங்களின் தற்போதைய நிலை தொடர்பாகவும் இவர்கள் அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது .
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇