மட்டக்களப்பில் தேசத்தை கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம் – சமூக உற்பத்தி திறன் மாதிரி கிராம திட்டம் தொடர்பான விசேட கலந்தரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தசாமி பிரபுவின் பங்கு பற்றுதலுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 27.03.2026 அன்று நடைபெற்றது.
தேசத்தை கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம் – சமூக உற்பத்தி திறன் மாதிரி கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்திட்டம் தொடர்பாக அமைச்சர் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.
மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஒரு கிராமத்தில் 50 நபர்களை தெரிவு செய்து முன்மாதிரி கிராமமாக செயற்பட்டு கிராமத்தில் கல்வி, கலாசார, உணவு, உற்பத்திறன், பொருளாதாரம் போன்ற பல விடயங்களை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.
இதன் போது வளமான கிராமம் எனும் கருப்பொருளுக்கமைய கிராம ரீதியில் செயற்படுத்தப்படும் விடயங்கள் தொடர்பான அனுபவ பகிர்வுகள் மற்றும் எதிர் நோக்கும் சவால்கள் தொடர்பாக கலந்துரையாடி அவற்றை கையாள்வதற்கான ஆலோசனைகளை வழங்கி சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணி தலைவியும் மாநகர சபை உறுப்பினருமான வனிதா செல்லப்பெருமாள், உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ரீ.நிர்மலராஜ், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரின் இணைப்பு செயலாளர் க.திலிப்குமார், கிளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் மாவட்ட இணைப்பாளர் பேபியன் பாத்திலட்,
மாவட்ட உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆர்.புவனேந்திரன், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
சமூகத்தின் உற்பத்தித்திறனை அபிவிருத்தி செய்யவும், அதன் மூலம் எமது நாட்டின் வளர்ச்சி இலக்குகளை அடைய இத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.














இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










