பூமியின் வடக்கு அரைகோளத்தில் கோடைக்காலம் ஆரம்பமாகியுள்ளதால் அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் வெப்ப அலைகள் ஏற்பட ஆரம்பித்துள்ளன.
கடுமையான வெப்பத்தால் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. வெப்பம் காரணமாக சில நாடுகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன் பொது இடங்களின் பணிகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. குறித்த காலப்பகுதியில் மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் எச்சரிக்கைகளும் அறிவுறுத்தல்களும் வழங்கப்படுகின்றன.
வரலாற்றுடன் ஒப்பிடுகையில் ஆண்டின் ஜூலை மாதமென்பது அதிக வெப்பமான மாதமாகும். வடக்கு அரைக்கோளத்தின் சில பகுதிகளில் குறித்த மாதத்தில் 40 பாகை செல்சியசிற்கும் அதிக வெப்பநிலை பதிவாகும். 2023ம் ஆண்டிலும் வெப்பமான மாதமாக ஜூலை பதிவானது.
பூமி சூரியனைச் சுற்றி வரும் போது அதன் கோட்டில் 23.5 டிகிரி சாய்ந்துள்ளது. இது வருடத்தின் பல்வேறு நேரங்களில் சூரிய ஒளியின் மாறுபட்ட அளவுகளில் தங்கியுள்ளது. மாறிவரும் பருவங்களுக்கு இது காரணமாக அமைகிறது.
குறித்த மாதத்தில் சூரியன் நண்பகலில் வானத்தில் அதன் மிக உயர்ந்த புள்ளியை அடையும் நாள் ஆண்டின் மிக நீண்ட நாள் மற்றும் குறுகிய இரவுக்கு வழிவகுக்கும். ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை கோடைக்காலத்தை அனுபவிக்கும் அதேநேரம் உலக சனத்தொகையில் சுமார் 90 வீதமானோர் வடக்கு அரைக்கோளத்தில் வாழ்கின்றனர்.
இதனால் குறித்த மாதங்களில் அதிக நேரடி சூரிய ஒளி மற்றும் நீண்ட பகலை அனுபவிக்க நேரிடும். கோடைக்காலத்தில் சூரியனின் அதிக தாக்கம் தரையில் உறிஞ்சப்படுகிறது. இது சுற்றியுள்ள காற்றையும் வெப்பமாக்குகிறது. மற்றும் வெப்பமான வானிலையையும் உருவாக்குகிறது.
வெப்ப அலையால் மக்கள் மிகவும் அவதிப்படும் நிலை இந்த மாதத்தில் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பது முக்கியமானது என வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். அதிக வெப்பத்தை வெல்வதற்கு உள்ள வழிமுறைகளை இப் படம் விளக்குகின்றது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇