அரச பணியாளர்களுக்கான கொடுப்பனவை 10,000 ரூபாயால் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான முதற்கட்ட நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
இதற்கமைய அரச பணியாளர்களுக்கான வேதனத்தை செலுத்துவதற்காக இதுவரையில் ஒதுக்கப்பட்ட 95 பில்லியன் ரூபாவிற்கு மேலதிகமாக 14 பில்லியன் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, குறித்த 10,000 ரூபாயில் 5,000 ரூபாய் இந்த மாதத்தில் இருந்து வழங்கப்படும்.
எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து குறித்த 10,000 ரூபாய், அரச பணியாளர்களின் வேதனத்துடன் இணைத்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇