மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான புதிய பிரேரணையை எதிர்வரும் வாரத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்க முடியும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான முன்மொழிவுகள் இதற்கு முன்னரும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த பிரேரணையை மீளாய்வு செய்து கடந்த 8 ஆம் திகதி சமர்ப்பிக்க வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
இதற்கு இரண்டு வார கால அவகாசம் அளிக்குமாறு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் தெரிவித்திருந்தது.
இதன்படி, புதிய மின் கட்டண முன்மொழிவு அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇