ஜனாதிபதித் தேர்தல் திகதி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானதன் பின்னர், தேவையான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (22.07.2024) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பிரதி அஞ்சல்மா அதிபர் ராஜித கே. ரணசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இந்த வருடம் நடத்தப்பட வேண்டும்.
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள காலவரையறையைக் கருத்தில் கொண்டு, எதிர்வரும் செப்டம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தேர்தல் நடைபெறும்.
தேர்தலை நடத்துவதற்கான உரிய திகதியைத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்ததன் பின்னர் அது தொடர்பான நடவடிக்கைகளை அஞ்சல் திணைக்களம் ஆரம்பிக்கும் என பிரதி அஞ்சல்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇