சாரதிகளுக்கு போக்குவரத்து பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மலையகத்தில் உள்ள பிரதான மற்றும் சிறு வீதிகளில் பயணிக்கும் போது அவதானத்துடன் செயற்படுமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். 

தற்போது, நுவரெலியாவில் உள்ள சுற்றுலாத் தலங்களை பார்வையிடுவதற்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுற்றுலாப் பயணிகள் இடங்களை பார்வையிட்டதன் பின்னர், இரவில் வீடுகளை நோக்கிப் பயணிப்பதால், விபத்துக்கள் அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறிப்பாக நுவரெலியா – பதுளை, நுவரெலியா – கண்டி, நுவரெலியா – ஹட்டன் போன்ற பிரதான வீதிகள் செங்குத்தான வளைவுகள் மற்றும் அதிக பள்ளங்களையும் கொண்டுள்ளன. 

இதன் காரணமாக அதிகமாக வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றன. 

இந் நிலையில், வீதி சட்ட ஒழுங்குகளை மீறுதல், மதுபானம் அருந்திவிட்டு வாகனத்தை செலுத்துதல், அதிக வேகம் உள்ளிட்ட விடயங்களால் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. 

இதன்காரணமாக, நுவரெலியாவிற்கு சுற்றுலா வரும் புதிய சாரதிகள் வீதிகளின் நிலையறிந்து அவதானமாக வாகனங்களை செலுத்த வேண்டும் என நுவரெலியா பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects