மட்டக்களப்பில் “ஆரோக்கியமான வாழ்க்கை முறைமை” தொடர்பாக அரச உத்தியோகத்தர்களை தெளியபடுத்தும் செயலமர்வொன்று 17.06.2026 அன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நோய் தொற்றுக்கள் அதிகரித்துவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையும் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடாத்திவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வு புதிய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டபத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷனி ஸ்ரீகாந்தின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் தொற்றா நோய் பொறுப்பு வைத்திய அதிகாரி் வைத்தியர் எம்.ருதேஷன் கலந்து கொண்டு “ஆரோக்கியமான வாழ்க்கை முறைமை” எனும் தலைப்பில் தெளிவூட்டல்களை வழங்கியிருந்தார்.
மேற்படி நிகழ்வில் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஜீ.பிரணவன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் காயத்திரி ரமேஸ், மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளர் ரீ.மதன் உள்ளிட்ட மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த தெளிவூட்டல் நிகழ்வில் அதிகளவிலான மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

















இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










