மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை – மீரிகம பகுதியின் முதல் 500 மீற்றர் பணிகள், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப்போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம், முக்கிய நான்கு கட்டங்களாக இப் பணிகள் வகுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில், கடவத்தை முதல் மீரிகம வரையும், மீரிகம முதல் குருநாகல் வரையும், பொதுஹெர முதல் ரம்புக்கனை வரையும் மற்றும் ரம்புக்கனை முதல் கலகெதர வரையும், அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிக்கவுள்ளதாகப் பிரதி அமைச்சர் கூறியுள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










