முழங்கால் கீல்வாத பாதிப்புக்கு நிவாரணம் – நவீன சத்திர சிகிச்சை
இன்றைய திகதியில் எம்முடைய இளைய தலைமுறையினர் தங்களுடைய வாழ்க்கை நடைமுறை மற்றும் உணவு முறையை மாற்றி அமைத்துக் கொண்டிருப்பதால் இளம் வயதிலேயே மூட்டு வலி, முழங்கால் மூட்டு வலி போன்ற பாதிப்புகளுக்கு முகம் கொடுக்கிறார்கள். இதனால் நிற்பதற்கும் நடப்பதற்கும் மாடிப்படி ஏறுவதற்கும் சிரமப்படுகிறார்கள்.
இதனால் அவர்களுடைய வாழ்க்கைத் தரம் மற்றும் நாளாந்த நடவடிக்கைகளில் பாரிய பாதிப்பும் ஏற்படுகிறது. இது போன்ற மூட்டு வலி பாதிப்புகளுக்கு தற்போது ஜெனிகுலர் ஆர்டரி எம்போலைசேசன் எனும் நவீன சத்திர சிகிச்சை மூலம் முழுமையான நிவாரணம் பெறலாம் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு முழங்கால் வலி, முழங்கால் மூட்டு வலி ஏற்படுவது இயல்பு. இதுபோன்ற தருணங்களில் முழங்கால்களில் உள்ள மூட்டுகள் தேய்மானம் அடைகிறது . குறிப்பாக மூட்டுகளில் உள்ள குருத்தெலும்புகள் தேய்வடைகிறது. அத்துடன் அந்த மூட்டுகளில் உள்ள சினோவியல் எனப்படும் திரவத்தின் சமச்சீரற்ற தன்மை காரணமாக வீக்கம், வலி ஆகியவை ஏற்படுகிறது. மேலும் மூட்டுகளில் ஏற்படும் உராய்வின் காரணமாக இத்தகைய சவ்வு வீக்கமடைகிறது. இதனால் வலியும், பாதிப்பும் அதிகமடைகிறது.
இந்நிலையில் இத்தகைய பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்க ஜெனிகுலர் ஆர்டரி எம்போலைசேசன் எனும் நவீன சத்திர சிகிச்சை அறிமுகமாகி இருக்கிறது. இத்தகைய சத்திர சிகிச்சை மூலம் மூட்டுகளில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பிற்கு முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது. இதனால் மூட்டு வலி, வீக்கம் மற்றும் முழங்கால் மூட்டு வலி பாதிப்பும் குறைகிறது. இயல்பு நிலை விரைவில் திரும்புகிறது.
பல்வேறு காரணங்களால் மூட்டு மாற்று சத்திர ரசிகிச்சை செய்து கொள்ள விரும்பாதவர்களுக்கும், விவரிக்க இயலாத மருத்துவ காரணங்களால் மூட்டு மாற்று சத்திர சிகிச்சை செய்து கொள்ள இயலாதவர்களுக்கும், மூட்டு வலி முழங்கால் மூட்டு வலி பாதிப்பினை பாதிப்பிற்கு நிவாரணம் கிடைக்க ஜெனிகுலர் ஆர்டரி எம்போலைசேசன் எனும் நவீன சத்திர சிகிச்சை பலனளிக்கிறது.
வைத்தியர் ஆறுமுகம்
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇