மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரும்போக நெற் செய்கையினை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கான ஆரம்ப விவசாயக் குழுக் கூட்டம் 24.09.2024 அன்று மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் நடை பெற்றது.
மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சக்தியானந்தியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய நீர்ப்பாசன திட்டம் மற்றும் மாகாண நீர்ப்பாசன திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் விவசாய செய்கை நிலங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு, பல விடையங்களுக்கான இறுதித் தீர்மானங்களும் எட்டப்பட்டது.
இதன் போது மத்திய நீர்ப்பாசனத்தின் கீழ் 12 ஆயிரத்து 19 ஏக்கர் நீர்ப்பாசன காணியும் நான்காயிரத்தி 505 ஏக்கர் மானாவாரி காணியும் நெற்செய்கை பண்ணப்படவுள்ளதாகவும் மாகாண நீர்ப்பாசன திட்டத்தில் சிறிய நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் 935 ஏக்கரும் மானாவாரி நெற்செய்கையின் கீழ் 17,290 ஏக்கறுமாக மொத்தமாக 34,756 ஏக்கரில் நெற்செய்கை இப்பிரதேசத்தில் செய்கை பண்ணப் படவுள்ளது.
விதைப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 10 திகதி வரை இடம் பெறவுள்ளது எனவும் விதைப்பு ஒக்டோபர் 30 திகதி முடிவடையும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் மத்திய நீர்ப்பாசன திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் மற்றும் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், விவசாயத் திணைக்கள மாவட்டப் பிரதிப் பணிப்பாளர், கமநலவிதைப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி தொடக்கம் 10 திகதி வரை இடம் பெறவுள்ளது எனவும் விதைப்பு ஒக்டோபர் 30 திகதி முடிவடையும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் மத்திய நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் மற்றும் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், விவசாயத் திணைக்கள மாவட்ட பிரதிப் பணிப்பாளர், கமநலத் திணைக்கள உதவி ஆணையாளர் உள்ளிட்ட மேலும் பல துறைசார் அதிகாரிகள், விவசாயப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇