தேசிய கண் வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (23) முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.
அந்த வைத்தியசாலையின் பதில் பணிப்பாளரைப் பதவி நீக்குவதற்குச் சுகாதார அமைச்சு இணக்கம் வெளியிட்டதை அடுத்து, குறித்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தேசிய கண் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளரைப் பதவி நீக்குமாறு கோரி, அந்த வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று காலை 8 மணிமுதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட முன்னதாக தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇