தனிநபர் வருமான வரி எல்லையை 5 இலட்சம் ரூபாயிலிருந்து 7 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக மாற்றியமைக்க சர்வதேச நாணய நிதியத்திற்கு அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.
இந்த வருட வரி வருவாயின் வலுவான செயல்திறன் காரணமாக, கடந்த கால வரி சீர்திருத்தங்களால் பாதிக்கப்பட்ட நடுத்தர வர்க்க வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கத்துடன் இந்தப் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பரிந்துரைக்குச் சர்வதேச நாணய நிதியம் திருத்தங்களை முன்மொழிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇