மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் – காத்தான்குடி கோட்டத்தின் கீழ் உள்ள காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலயத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலிஸாஹிர் மௌலானா (22) நேரடி விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
பாடசாலையின் அதிபர் எம்.பி.எம். றபீக் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினர் விடுத்த அழைப்பின் பேரிலேயே பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மெளலானா இவ் விஜயத்தினை மேற்கொண்டார்.
காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலயம் காத்தான்குடி பிரதேசத்தில் முதலாவது மூத்த பாடசாலையாகவும் காணப்படுவதுடன் இப் பாடசாலையின் கல்வி மட்டமும் தற்போது மிக சிறப்பாக வளர்ச்சியடைந்து கொண்டு வருகின்றன.
இருப்பினும் பாடசாலையின் வகுப்பறை கட்டடப் பற்றாக்குறை, ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பாடசாலையின் வளப்பற்றாக்குறை என்பன நீண்ட காலமாக நிலவி வரும் நிலையில் அதனை பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டு சென்று பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலிசாஹிர் மௌலானவின் ஊடாக முடிந்தளவு தீர்வுகளை பெற்றுக் கொள்ளும் முகமாகவே குறித்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்து.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலிசாஹிர் மெளலானா பழைய மாணவர் சங்க உறுப்பினர்களின் உதவியுடன் பாடசாலையினை பார்வையிட்டதுடன், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்கள், பழைய மாணவர் சங்கத்தினர் மற்றும் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
அழைப்பு விடுத்தவுடன் எவ்வித மறுப்பும் இன்றி மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் கரிசனை கொண்டு விரைவாக விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் செய்யித் அலிசாஹிர் மௌலானவுக்கு இதன்போது பாடசாலை சமூகத்திர் பொன்னாடை பொற்றி கௌரவித்தனர்.
மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் விஜயத்தின்போது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் யூ.எல்.எம்.என். முபீன், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இளைஞர் அமைப்பாளர் பெரோஸ் முஹம்மட், பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇