மூன்று மாவட்டங்களில் நெல் தவிர்ந்த ஏனைய பயிர்களை பயிரிடும் மூவாயிரம் விவசாயிகளுக்கு மானியமாக உரத்தை வழங்க கட்டார் நலன்புரி நிறுவனமொன்று முன்வந்துள்ளது.
இதனூடாக விவசாயி ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று கட்டார் நலன்புரி நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் இடையில் இடம்பெற்றது.
இதன்போது, குருணாகல், மொனராகலை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் ஒரு ஹெக்டேருக்கும் குறைவான நிலத்தில் மரக்கறி மற்றும் நெல் தவிர்ந்த ஏனைய பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு இந்த மானியத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇