2030ஆம் ஆண்டில் மகளிர் உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள அணிகளின் எண்ணிக்கையை 16ஆக அதிகரிப்பதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.
கடந்த 19ஆம் திகதி முதல் 22.07.2024 அன்று வரை கொழும்பில் இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டத்தின் போது இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மகளிர் உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் 8 அணிகள் பங்கேற்றிருந்தன.
அதன்பின்னர் 2016ஆம் ஆண்டு அணிகளின் எண்ணிக்கை 10ஆக அதிகரிக்கப்பட்டன.
இந்த ஆண்டிலும் 10 அணிகள் பங்கேற்பதுடன் 2026 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்படவுள்ளன.
இதன்படி 2030 ஆம் ஆண்டில் மகளிர் உலகக் கிண்ண இருபதுக்கு 20 தொடரில் 16 அணிகளுக்கு வாய்ப்பளிப்பதற்கான யோசனைக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பொதுக்கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇