மட்டக்களப்பில் தேசிய சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித்திட்டத்தில் ஜனாதிபதி விருதிற்கு தகுதியான மாணவர்களுக்கான நேர்முக பரீட்சை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பில் தேசிய சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித்திட்டத்தில் ஜனாதிபதி விருதிற்கு தகுதியான மாணவர்களுக்கான நேர்முக பரீட்சை மண்முனை மேற்கு கொத்தியாபுலை கலைவாணி வித்தியாலயத்தில் 09.02.2026 அன்று இடம் பெற்றது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையும் இலங்கை கல்வி அமைச்சும் இணைந்து நடைமுறைப்படுத்தும் தேசிய சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித் திட்டத்தில் இறுதிப் பதக்கமான ஜனாதிபதிப் பதக்கத்தினை பெறுவதற்கான இறுதி நேர்முகத் தேர்விற்கு மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலிருந்து முதல் தடவையாக மட்/மமே/கொத்தியா புலை கலைவாணி வித்தியாலயத்திலிருந்து ஐந்து மாணவர்கள் தகுதி பெற்றிருக்கின்றனர்.

சுற்றாடல் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் மத்திய சுற்றாடல் அதிகாரசபையால் (CEA) வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் தேசிய மட்டத்தில் இடம் பெறும் போட்டியில் முதல் முறையாக மண்முனை மேற்கு வலய மட்டத்தில் இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நேர்முக நிகழ்வில் பரீட்சிப்புக் குழுவின் பிரதானியாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் கல்வி விழிப்புட்டல் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி அஜித் குணவர்தன கலந்து சிறப்பித்ததுடன், கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரின் பிரதிநிதியாக பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ். மலிக், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ரீ.நிர்மலராஜ், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் சுற்றாடல் கல்வி மற்றும் விழிப்பூட்டல் பிரிவின் உதவிப் பணிப்பாளர் நா.திருலோகச்சந்திரன் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்ற நிகழ்வில் கொத்தியா புலை கலைவாணி வித்தியாலய அதிபர் கே.லக்மன் கலந்து கொண்டார்.

சுற்றாடல் முன்னோடி மாணவர்களால் தேசிய கீதம், சுற்றாடல் கீதம் மற்றும் பாடசாலை கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

இதன் போது பாடாசலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் புடை சூழ அதிதிகள் வரவேற்கப்பட்டு ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் வலய கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப்பணிப்பாளர் திருமதி. ரீ.உதயாகரன், மண்முனை மேற்கு கல்விக் கோட்டத்திற்கு பொறுப்பான மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் அதிகாரி காயத்திரி சிறிவித்தியன், சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித்திட்ட பொறுப்பாசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது கருத்து தெரிவித்த சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் கல்வி மற்றும் விழிப்பூட்டல் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி அஜித் குணவர்த்தன மட்டக்களப்பு மேற்குப்பகுதிக்கு முதல் தடவையாக விஜயம் செய்துள்ளதாகவும் இப் பிரதேசத்தின் சுற்றாடல் முக்கியத்துவம் பற்றிய விளக்கவுரை ஒன்றை ஆற்றியிருந்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects