அரச ஊழியர்கள் அனைவரும் அனுமதியின்றி சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையில் பாகிஸ்தான் அரசாங்கம் உத்தரவொன்று பிறப்பித்துள்ளது.
பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராகத் தகவல்கள் வெளியிடுவதைத் தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களின் நடத்தைகள் குறித்து 1964 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.
அரச ஊழியர்கள் அந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, அரச ஊழியர்கள் அனுமதியின்றி எச் சமூக வலைத்தளத்தையும் பயன்படுத்த முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇