இலங்கை சுங்கத்திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள தற்காலிகத் தரவுகளுக்கு அமைய, கடந்த ஜூன் மாதம் ஏற்றுமதி வருவாய் 1031.2 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இது 2023ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2.58 சதவீத அதிகரிப்பாகும்.
ஆடை, தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை சார்ந்த ஏற்றுமதிகளின் காரணமாக இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
அதேநேரம் 2024ஆம் ஆண்டின் மே மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த ஜூன் மாதம், ஏற்றுமதி 1.97 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇