திருகோணமலை மான் பூங்காவானது உலகிலேயே கடற்கரையோரத்தில் மிகவும் இயற்கையான சூழலில் அமைந்த திறந்த நகர மான் பூங்காவாக கருதப்படுகிறது.
மான்களின் இயற்கையான வாழ்விடத்தை பேணும் வகையில் பூங்காவின் சூழல் பராமரிக்கப்பட்டு, அவை சுதந்திரமாக சுற்றித் திரிவதற்கும் பார்வையாளர்களுடன் நிலையான முறையில் தொடர்புகொள்வதற்கும் அனுமதிக்கிறது.
திருகோணமலை மான் பூங்கா தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த திறந்த நகர மான் பூங்காவில் அதிக மான்கள் காணப்படுகின்றன.
திருகோணமலை நகரம் முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட மான்கள் வாழ்கின்றன. இந்த அதிக எண்ணிக்கையிலான மான்கள் ஒரு தனித்துவமான அம்சமாகும். இது உலகெங்கிலும் உள்ள ஏனைய ஒத்த பூங்காக்களிலிருந்து தனித்து நிற்கிறது.
இந்த பூங்காவில் உணவுக்கடை உள்ளது. பார்வையாளர்கள் விரும்பும் பல்வேறு உணவுகளை இந்த உணவு நிலையத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த உணவுகள் பூங்காவின் சுற்றுச்சூழல் மற்றும் அதன் கருப்பொருளுடன் ஒத்துப்போகக்கூடியதாகவும் ஆரோக்கியமானதாகவும் சுற்றுச்சூழல் சார்ந்த உணர்வினை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருப்பதாக கூறப்படுகிறது.
ஜப்பானில் உள்ள நாரா மான் பூங்காவில் மான்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஒரே உணவான சத்தான பிஸ்கட்டுகளை அந்த அரசு தயாரித்து விற்பனை செய்கிறது. எனினும், அதுபோன்று ஒரு திட்டம் திருகோணமலை மான் பூங்காவில் இல்லை.
நாராவில் இந்த பிஸ்கட்டுகளின் விலை அதிகம் என்றாலும், மான்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை இதனூடாக அந்நாட்டு அரசு உறுதிப்படுத்துகிறது.
எனினும், இயற்கை உண்ணி விலங்குகளுக்கு இயற்கையான உணவுகளை கொடுப்பதே அவற்றின் வாழ்வியலுக்கு சிறந்தது. அந்த வகையில், திருகோணமலை மான் பூங்கா தனித்து நிற்கிறது.
அத்தோடு, இங்கு பார்வையாளர்களுக்கு நுழைவுக் கட்டணம் இல்லை. இதனால் இது பரந்தளவிலான மக்கள் அணுகக்கூடிய பூங்காவாகிறது.
மேலும், மான்கள் மற்றும் அவற்றின் இயற்கைச் சூழல் எந்த நிதித் தடையும் இல்லாமல் பேணிப் பாதுகாக்கப்படுகிறது.
அந்த வகையில், ஒவ்வோர் அம்சமும் திருகோணமலை மான் பூங்காவின் தனித்துவமான அம்சங்களை எடுத்துக்காட்டுகிறது. இது இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களுக்கு ஒரு தனித்துவமான மற்றும் கவர்ச்சிகரமான இடமாகவும் அமைகிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇