இம்மாதத்தின் கடந்த மூன்று வாரங்களில் 120,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, அக்காலப்பகுதியில் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 127,925 ஆகும்.
அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்களாவர். அதன்படி, 30,442 இந்தியர்கள் இலங்கை வந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி பிரித்தானியா, சீனா, ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு அதிகளவில் வந்துள்ளனர்.
அதன்படி, இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் 11 இலட்சத்து 38,174 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇