உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை தேர்தல் திகதியை அறிவிப்பதற்கு சட்டரீதியான தடை நிலவுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க , தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தில் அடுத்த வருடம் ஜனவரி மாதத்துக்குள் திருத்தம் மேற்கொள்ளப்படும் என பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
இச் சட்டத்தில் விரைவில் திருத்தம் கொண்டுவருமாறு தேர்தல் ஆணைக்குழு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சிடம் அண்மையில் கோரியிருந்தது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக முன்னதாக பெறப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கு அரசாங்கம் அண்மையில் தீர்மானித்தது.
அதன்படி, குறித்த தேர்தலுக்காக புதிய வேட்புமனுக்களை கோருவதற்காக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇