விலங்குகள் கணக்கெடுப்பு குறித்து அமைச்சரின் அறிவித்தல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

நாட்டில் 5.1 மில்லியன் குரங்குகள் இருப்பதாகவும் விலங்கு கணக்கெடுப்பு அறிக்கையில் பொதுமக்கள் வழங்கிய தகவல்களில் 50 வீதமானவை துல்லியமானவை என்று விவசாயம், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். 

இன்று (26.09.2025) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இத் தகவலை முன்வைத்தார். 

உணவுப் பயிர்களைச் சேதப்படுத்தும் விலங்குகளை அடையாளம் காணவும், முறையான ஆய்வை மேற்கொள்ளவும், உரிய நடவடிக்கை எடுக்கவும் இந்த விலங்கு கணக்கெடுப்பு மார்ச் 15 ஆம் திகதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. 

அதே நேரத்தில் நடத்தப்பட்ட இந்த விலங்கு கணக்கெடுப்பின் போது, குரங்குகள், மந்தி, மர அணில் மற்றும் மயில் ஆகியவை குறித்து ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டதாக அமைச்சர் கூறினார். 

முடிவுகளின் பிரகாரம், குரங்குகள் மற்றும் மந்திகள் குறித்து பொதுமக்கள் வழங்கிய தகவல்கள் 50 வீதம் துல்லியமானவை எனவும் தெரிவித்தார். 

அதனடிப்படையில் தற்போது நாட்டில் 5.1 மில்லியன் குரங்குகளும் 1.7 மில்லியன் மந்திகளும் 2.6 மில்லியன் மர அணில்களும் 4.2 மில்லியன் மயில்களும் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். 

யாழ்ப்பாணத்தில் உள்ள நெடுந்தீவுக்குச் சொந்தமான சுமார் 6 கிராம அலுவலர் பிரிவுகளில் இக் கணக்கெடுப்புடன் தொடர்புடைய விலங்குகள் இல்லாததால் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

இதேவேளை இந்த விலங்குகள் கணக்கெடுப்புக்கு ரூ.3.8 மில்லியன் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects