வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் ஊடக மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்ஸின் தலைமையில் நடைபெற்ற இந் ஊடக மாநாட்டில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன் கலந்து கொண்டார்.
கண்ணிவெடி அகற்றல் மற்றும் மீள்குடியேற்ற செயற்பாட்டின் முன்னேற்றம், சிவில் பிரஜைகளின் காணி விடுவிப்பு, சூரிய மின்படல வீட்டுத்திட்டம், குடிநீர் விநியோக திட்டம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டங்கள், “உரித்து” செயற்றிட்டம், கல்வித்துறை, விவசாயம் மற்றும் நீர்பாசன திட்டங்கள், சுகாதாரத்துறை, முதலீட்டு ஊக்குவிப்பு வலய (BOI) திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது தெளிவுப்படுத்தப்பட்டது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇