பாரிஸ் 2024′ ஒலிம்பிக்கில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவரான தருஷி கருணாரத்ன பங்கேற்கும் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியின் ஆரம்ப சுற்றுப் போட்டிகள் இன்று (02.08.2024) நடைபெறவுள்ளது.
பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று இரவு 11.15 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன.
தருஷி 6 வது ஆரம்ப போட்டியில் பங்குபற்றவுள்ளதுடன் இப் போட்டி இலங்கை நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டிக்குத் தகுதி பெற்ற வீராங்கனைகளில், தருஷியைத் தவிர மேலும் 3 வீராங்கனைகள் ஆசிய பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
அந்த வீராங்கனைகள் பாலஸ்தீனம், குவைத் மற்றும் பஹ்ரைன் நாட்டை சேர்ந்தவர்களாவர்.
மேலும், தருஷி கலந்து கொள்ளும் 6 வது ஆரம்ப போட்டியில் பங்கேற்ற ஒரே ஆசிய வீராங்கனை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇